டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடருக்குத் திரும்ப மாட்டார் என என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தகவல் தெரிவித்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. டெல்லி அணிக்காக ரூ.11.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் நடப்பு ஐ.பி.எல்லில் 12 போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறக் குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.