இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயை சேர்ந்த காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-0 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் டாமி பால் உடன் மோத உள்ளார்.