கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
காட்டாம்பட்டி, எல்லப்பாளையம், கெம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேந்திரம், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால், பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தித் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.