நடிகை சமந்தா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகப் பரவி வந்த தகவலுக்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் ராஜ் இயக்கத்தில் சிடாடெல் ஹனி பனி எனும் வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.
இவர்கள் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும். விரைவில் ஜோடியாக மும்பையில் குடியேறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகிப் பரவின.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சமந்தாவின் மேலாளர், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அவர்களுக்கு இடையே அவ்வாறு எந்த ஒரு பந்தமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.