டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக முகேஷ் கோயல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.