ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த நஞ்சகவுண்டன்பாளையம் அரசு நெல் கொள்முதல் மையத்தில் போதிய ஆட்கள் இல்லாததால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மூட்டைகளில் அடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, கனமழையின் காரணமாக பாரியூரில் உள்ள நெல் கொள்முதல் மையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.