திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
வாணியம்பாடியில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே, கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குளம்போல வெள்ளநீர் தேங்கியது.
கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கடும் அவதியடைந்தனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.