கேன்ஸ் திரைப்பட விழாவின்போது ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோனை தேனீ கொட்ட வந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதுமிருந்து வந்துள்ள நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குப் பறந்து வந்த தேனீ ஒன்று எம்மா ஸ்டோனை கொட்ட வர, அவர் பயந்துபோய் கீழே குனிந்தார். பின்னர் தேனீயை அருகிலிருந்தவர்கள் விரட்டவும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.