நெல்லை மாவட்டத்தில் எழுந்த கனிமவள முறைகேடு புகார் காரணமாக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் அதிகளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், விதிகளை மீறி கேரளாவிற்குக் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, மதுரை மண்டல கனிமவள இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் நெல்லை கனிமவள அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், சுமார் 40 கிரஷர்களுக்கு நடைச்சீட்டு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உதவி புவியியலாளர் சேகர் மற்றும் உதவியாளர் சொர்ணலதா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் 3 ஊழியர்களை இடமாற்றம் செய்தும், நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் பாலமுருகனைக் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.