உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக 2020ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள பா.நீதிபதி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என, அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.