சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில், பங்க் ஊழியரை வாடிக்கையாளர், கடுமையாகத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட வந்த நபர் ஒருவர், பங்க் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டார்.
வரிசையில் வந்தால் பெட்ரோல் போடுவதாக ஊழியர் கூறவே, ஆத்திரமடைந்த அவர், தன்னை பாக்சர் எனக்கூறி கடுமையாகத் தாக்கி உள்ளார்.
இதனை அடுத்து பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கிய ராகுல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.