சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தேவகுமார் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையும் நிறைவு பெற்றது.