தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி ஒரு மாத காலம் ஆகியும், மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தைத் தமிழக அரசு வழங்காததால் ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால், தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.