ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்ந்து 4-வது நாளாக ரசாயன நுரையுடன் செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது, கனமழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அதிகப்படியான நுரை செல்கிறது.
மழைக் காலங்களில் ஆற்றில் அதிக அளவு ரசாயன நுரை செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.