கோவை கிருஷ்ணா அதித்யா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அறிவொளி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோடைக் கால பன்முக பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
மே 2-ம் தேதி தொடங்கிய பயிற்சி முகாமானது 15 நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்ட நிலையில், முகாமில் பயிற்சி பெற்ற ஸ்வயம் சேவகர்கள், கராத்தே, சிலம்பம், யோகா போன்றவற்றைச் செய்து காட்டினர்.