நத்தம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விழாக் குழுவினரைக் கண்டித்து மாடுபிடி வீரர்கள் டி-சர்ட்டை கழற்றி எறிந்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சங்கரன் பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
இறுதிச்சுற்றில் 20க்கும் குறைவான காளைகள் மட்டுமே இருந்ததால், அந்த சுற்றில் களமிறங்க வேண்டிய வீரர்கள் அதிருப்தியடைந்தனர். மைதானத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், போட்டியில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை வெளியேற்றவே, ஆத்திரமடைந்த வீரர்கள், விழாக் குழுவால் வழங்கப்பட்ட டி-ஷர்ட்களை கழற்றி வீசிவிட்டுச் சென்றனர்.
6ஆவது சுற்றுக்குப் பின் போட்டி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, வெளியேற்றப்பட்ட மாடுபிடி வீரர்கள் விழா கமிட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.