காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த கைவல்யம் நகரில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், அவை வெளியேற்றும் கழிவுகளால் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தது.