உதகையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகிறது.
அந்த வகையில், சோலோ ஆர்ட் கேலரி சார்பில் ஓவியக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், 21 ஓவியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இந்த ஓவியக் கண்காட்சியில் ஓவியங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளதாக ஓவியக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.