காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி காசாவில் நடந்த போரின்போது இஸ்ரேலிய ராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை விற்றதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய பணயக் கைதிகளைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவியதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.