டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் சாதனை படைத்த தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நீரஜ் சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார்.
கத்தாரின் தோகாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்துள்ள நீரஜ் சோப்ரா தங்களது அன்பான வார்த்தைகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். தாய் நாடு இந்தியாவுக்கு எப்போதும் சிறந்ததைக் கொடுக்க ஆசைப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.