நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நாளை மறுதினம் கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் 22-ம் தேதிவரை தமிழக, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.