தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.