அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் மாண்ட்கோமரி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 15-வது மாடியில் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது பால்கனியின் இடைவெளி வழியாக அந்த குழந்தை கீழே விழுந்தது. அப்போது பால்கனி வழியாகக் குழந்தை கீழே விழுந்ததை அறிந்து தாய் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று பார்த்தபோது நல்வாய்ப்பாக அருகில் உள்ள புதரில் குழந்தை விழுந்து கிடந்தது.
பின்னர் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.