பாகிஸ்தானிற்குக் கடனுதவி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் மேலும் 11 நிபந்தனைகளை விதித்திருப்பது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதத்திற்குள் IMF அறிவுறுத்தியபடி புதிய மத்திய நிதிநிலை அறிக்கையைப் பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களும் ஏற்றுக் கொள்ளும் படியான புதிய சட்டங்களை அமலுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும் IMF நிபந்தனை விதித்துள்ளது.
வரி செலுத்துவோர்களை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது, விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்களை ஜூன் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது கடனுதவி திட்டத்தைப் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச நாணய நிதியம், அறிவுறுத்தப்பட்டுள்ள சீர்திருத்த வழிமுறைகளைப் பின்பற்றி அரசு மறு சீரமைப்பு திட்டத்தைப் பாகிஸ்தான் முன்மொழியவும் நிபந்தனை விதித்துள்ளது
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனவும் IMF நிபந்தனை விதித்துள்ளது.