ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 219 ரன்கள் குவித்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் Nehal Wadhera 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. இறுதி வரை போராடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 209 ரன்கள் சேர்த்து தோல்வியைத் தழுவியது.