டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற குஐராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் எடுத்தார். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்ஷன், சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். சாய் சுதர்ஷன் சதமடித்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தார்.