நெதர்லாந்து சாண்ட்வோர்டில் நடைபெற்ற ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
நெதர்லாந்து சாண்ட்வோர்டில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தய போட்டி இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் போர்ஷியா அணி சார்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார்.
தொடர்ந்து இரண்டாவது சுற்றில் அஜித்குமார் ஓட்டி சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. பின்னர் காரின் டயர் மாற்றப்பட்டு அஜித்குமார் மீண்டும் போட்டியில் கலந்து கொண்டார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற 40 பேரில் 40 வது இடத்தையே நடிகர் அஜித்குமார் பிடித்தார்.