ராதிகா ஆப்தேவின் ‘சிஸ்டர் மிட் நைட்’ திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகிறது.
கரண் கந்தாரி இயக்கிய இப்படத்தை அலாஸ்டர் கிளார்க் மற்றும் அன்னா கிரிபின் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதில், அசோக் பதக், சாயா கடம் மற்றும் ஸ்மிதா தம்பே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் கடந்த 16ம் தேதி அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
வரும் ஜூன் 11-ம் தேதி பிரான்சிலும் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இப்படம் இந்தியாவிலும் வருகிற 23ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
















