பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் சோபிதா துலிபாலா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பொன்னியின் செல்வன் படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.