ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆத்தூர், நரசிங்க புரத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மூவர்ணக் கொடி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்ததாகத் தெரிவித்தார்.நெல்லை மாவட்டம் சிவந்தி புரத்தில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மழையில் நனைந்தவாறு ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதில் முன்னாள் ராணுவ வீரருக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் அக்னி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.