யோகாசனத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பிரதமர் மோடிக்கு பிசியோதெரபி மருத்துவரும், யூடியூபருமான திவாகர் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார்ப் பள்ளி வளாகத்தில் தேசிய அளவிலான யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக யூடியூபர் திவாகர் கலந்து கொண்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகர், பிரதமர் மோடியால்தான் யோகாசனம் உலகம் முழுவதும் சென்றடைந்ததாகக் கூறினார்.
மேலும், சர்வதேச யோகா தினத்தன்று இரண்டு யோகா விருதுகளைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.