ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ரோவ்மன் பவல் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஷிவம் சுக்லாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.