ஐபிஎல் வரலாற்றில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார்.
அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனியை அணித்தலைவராக நியமித்துள்ளார். இருப்பினும் அவரது அணியில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரராக வலம் வரும் விராட் கோலி, அதிரடிக்குப் பெயர் போன கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், சிறந்த ஆல் ரவுண்டரான பிராவோ போன்ற முன்னணி வீரர்களுக்கு இடமளிக்காமல் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.