டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ள விராட் கோலி சரியான வழியனுப்புதல் இல்லாமல் ஓய்வு பெற்றது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவரை கௌரவப்படுத்த, அவரது ரசிகர்கள் 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து போட்டி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர்.
இதனால் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் முழுவதுமே 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்தவர்களால் நிரம்பி காணப்பட்டது.
இருந்த போதும் மழையின் காரணமாகப் போட்டி ரத்து செய்யப்பட்டதால் விராட் கோலி ஆட்டத்தைக் காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.