திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலாப் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்துள்ளார். அங்குக் காட்டெருமையைப் பார்த்த சினேகா ஓடியபோது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவரை காட்டெருமை மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சினேகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.