அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உருவாகியுள்ளது.
மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் உருவான இந்த ஏரி சுமார் 94 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை மூழ்கடித்துள்ளது.
கடந்த 19-ம் நூற்றாண்டில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களால் காணாமல் போயிருந்த துலாரே ஏரி, சுமார் 100 மைல் நீளம், 30 மைல் அகலத்துடன் பரந்து விரிந்திருந்தது.
மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியும், நீர்வழிப்பாதைகளும் அழிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் காணாமல் போயிருந்த ஏரியே தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது.