ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேசியக்கொடி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பாஜக சார்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், புதுச்சேரியில், பாஜக அகில இந்தியப் பொதுச்செயலாளர் துஷ்யந் குமார் தலைமையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.
மூலகுளம் சதுக்கத்திலிருந்து இந்திரா சதுக்கம் வரை சென்ற ஊர்வலத்தில் புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.