தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் எந்தவிதமாகப் பயனுள்ள திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , பொதுமக்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் விமர்சித்தார்.