தனது அடுத்த படத்துக்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பதை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.
விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், ‘பராசக்தி’ என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனால் அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.