கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் வானுயர கடும் புகைமூட்டம் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமானது.