திருச்சி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் கஞ்சா போதையில் புகுந்த கும்பல் மாணவர்களைத் தாக்கி பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் அருகே இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் கஞ்சா போதையில் அங்குப் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் மாணவர்களிடமிருந்த நகை, பணம் மற்றும் 13 செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.