பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
அதேபோல் பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் பருவ மழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.