காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.
2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் பெரும் உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் விளைவித்தது.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், ஹமாஸ் அமைப்பினர் நாடு கடத்தப்பட வேண்டும், காசாவில் ஆயுதங்கள் இருக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளை இஸ்ரேல் விதித்துள்ளது.
மேலும், உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காசாவிற்கு உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.