ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பாஜகவினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளக்கரையில் தொடங்கி விழுப்புரம் சாலை தீயணைப்பு நிலைய அலுவலகம் வரை மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.