ராணுவ கர்ணல் சோஃபியா குரேஷி குறித்துத் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக அமைச்சரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கர்ணல் சோஃபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி எனக் குறிப்பிட்டு மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய எம்.பி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரினார். அப்போது அமைச்சரின் பேச்சைக் கண்டித்த உச்சநீதிமன்றம், அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வெளிமாநில பெண் ஐபிஎஸ் அதிகாரி உட்பட 3 பேர் கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.