தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா குறித்து, சமூக வலைதள பயனர் ஒருவர் ஓராண்டுக்கு முன்பே NIA-வை எச்சரித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக, ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த பிரபல யூ-டியூபரான ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக அவர் உளவு பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கபில் ஜெயின் என்ற சமூக வலைத்தள பயனர் ஒருவர், ஜோதி மல்ஹோத்ரா குறித்து ஓராண்டுக்கு முன்பே என்.ஐ.ஏ-வை எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி எக்ஸ் தளத்தில் அவரிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.