பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் நடந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கினார்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விவரிக்க, 7 எம்.பி-க்கள் தலைமையில் நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10 நாட்கள் சுற்றுப்பயணமாக உலகம் முழுவதும் உள்ள 33 நகரங்களுக்கு இந்த குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 7 குழுக்களுக்குத் தலைமை வகிக்கும் 7 எம்.பி-க்களுக்கும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
நாளையும் இதுதொடர்பாக நாடாளுமன்ற குழுவிடம் அவர் விளக்கமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.