தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் பயங்கர குண்டு வெடிப்புக்குச் சதித்திட்டம் தீட்டியிருந்த, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்குத் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஆந்திரா மற்றும் தெலங்கானா புலனாய்வுத்துறை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆந்திராவின் விஜயநகரம் பகுதியில் பதுங்கியிருந்த சிராஜ் உர் ரஹ்மான் மற்றும் ஹைதராபாத்தில் பதுங்கிருந்த சையது சமீர் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்புக்கான சல்ஃபர், அமோனியா, அலுமினியம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.