ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் விசாகன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரித்தீஸின் உத்தரவின்படியே முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலில் பெரும்பங்கு திமுகவிற்கு கட்சி நிதியாக வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை தொடர்ந்து டாஸ்மாக் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.