திருப்பூர் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அடுத்துள்ள கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது விஷவாயு தாக்கி நான்கு பேரும் மயக்கம் அடைந்தனர். மீட்கப்பட்ட நான்கு பேரும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற இருவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆட்சியர் கிருஸ்துராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.